ஸ்ரீரங்கத்தில் முத்துப்பாண்டியன் கொண்டை, அடுக்கு பாவாடை சாற்றி அருள்பாலித்த நம்பெருமாள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2026 06:01
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் இராப்பத்து விழாவில் இன்று முத்துப்பாண்டியன் கொண்டையில், அடுக்கு பாவாடை சாற்றிக்கொண்டு நம்பெருமாள் புறப்பாடு கண்டருளினார்.
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களில் முதலாவதாக உள்ளது. ஆண்டுதோறும், ஸ்ரீரங்கம் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர், வைகுண்ட ஏகாதசி (இராப்பத்து) வைபவங்கள் துவங்கியது. இராப்பத்து ஏழாம் திருநாளான இன்று நம்பெருமாள் முத்துப்பாண்டியன் கொண்டையில், அடுக்கு பாவாடை சாற்றிக்கொண்டு புறப்பாடு கண்டருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொ