மார்ச் 3ல் சந்திர கிரகணம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஜன 2026 01:01
திருப்பதி; திருப்பதி: திருமலை, ஏழுமலையான் கோவிலில், சந்திர கிரகணத்தை முன்னிட்டு, வரும் மார்ச் 3ம் தேதி, அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மார்ச் 3ம் பகல் 03.20 மணிக்கு துவங்கி, மாலை 06.47 வரை சந்திர கிரகணம் நிகழ உள்ளது. சந்திரகிரகணத்தை முன்னிட்டு, மார்ச் 3ம் தேதி காலை 9 மணி முதல் இரவு 07.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படும். முன்னிட்டு, அன்று ஆர்ஜித சேவைகள் உள்ளிட்ட அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. கிரகணம் முடிந்து கோவிலை திறந்து சுத்தம் செய்யப்பட்ட பின், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மார்ச் மாதம் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் இதனை கருத்தில் கொண்டு ஒத்துளைப்பு தரும் படி திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.