ஓசூர்; கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மோரனப்பள்ளி கிராமத்தில், ராகு, கேது அதர்வன மகா பிரத்யங்கிராதேவி கோவில் உள்ளது. இங்கு, மார்கழி மாத பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ராகு, கேது மற்றும் மூலவர் பிரத்யங்கிரா தேவிக்கு, சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம், ஆராதனை நடந்தது. அதன் பின் மிளகாய் வத்தல் யாகம் நடந்தது. இதில், தமிழக எல்லையில் உள்ள கிராம மக்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வந்திருந்த பக்தர்கள், 100க்கும் மேற்பட்டோர் மிளகாய் வத்தலை யாக குண்டத்தில் போட்டு வழிபட்டனர். இதன் மூலம், தங்களுக்கு பிடித்த பில்லி, சூனியம், ஏவல் போன்றவை விலகும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.