சேலம்; சேலத்தில், தத்வமஸி ஞானபீடம் சார்பில், அகில பாரத ஐயப்ப பக்தர்கள், 2 நாள் மாநாடு, நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று, சேலம் ராஜ ராஜேஸ்வரி மகிளா சமாஜத்தின் சிவாம்பவா, முசிறி, லலிதா மகிளா சமாஜத்தின் ஜெயாம்பா, மதுரை ராஜ ராஜேஸ்வரி பீடத்தின் வித்யாம்பா தலைமையில், 108 யாக வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து கஜ பூஜையை, ஒகேனக்கல் அகில பாரதிய சந்தியாசிகள் சங்க நிறுவனர் ராமானந்த மகராஜ், சேலம் தேஜாமயானந்தா ஆசிரமத்தின் ஆத்மானந்த சரஸ்வதி, கோ பூஜையையும் தொடங்கி வைத்தனர். இதையடுத்து கரூர் பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வர விஸ்வ வித்யாலயாவின் சாரதா, கோவை சின்மயா க்ரிபா சின்மயா மிஷன் சம்பிரதிஷ்டானந்தா, குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பல்வேறு மடாதிபதிகள், ஜீயர்கள் பேசினர். இரவு, பிரபல பின்னணி பாடகர் வீரமணி ராஜூ, விஜய் யேசுதாஸின், ஐயப்ப பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. மாநாட்டில் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.