தளவாய்புரம்: சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயில் சித்திரை திருவோணத்தை முன்னிட்ட நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டில்தான் இவ்வாறு தினங்கள் மட்டும் அபிஷேகம் நடைபெறும். சித்திரை திருவோண நாளை முன்னிட்டு சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் அதிகாலை முதல் பால், தயிர், தேன், சர்க்கரை, பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தளவாய்புரம், சேத்துார், தேவதானம், சுற்றுப்பகுதி மக்கள் பங்கேற்று வழிபட்டனர்.