அனுப்பர்பாளையம்: திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூரில் அமைந்துள்ள சித்தி விநாயகர், கருப்பராய சுவாமி, கண்ணிமார் சுவாமி, திருக்கோவில் பொங்கல் விழா கடந்த 20 ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
விழாவையொட்டி, நேற்று 27ஆம் தேதி காலை 6 மணி முதல், ஸ்ரீ கருப்பராய சுவாமி மற்றும் ஸ்ரீ கன்னிமார் சுவாமிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுகணக்கான பக்தர்கள் பங்கேற்று மாவிளக்கு மற்றும் பொங்கல் வைத்து சாமியை வழிபட்டனர். மாலை 4:00 மணிக்கு கருப்ராயசுவாமி வீதி உலா சென்றார். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக குதிரை நடணம் நடைபெற்றது. இன்று 28 ந் தேதி இரவு பட்டி மன்றம், நாளை 29 ந் தேதி இரவு பாட்டு பட்டி மன்றம், 30 ந் தேதி இரவு இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைப்பெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகமிட்டியினர் செய்துள்ளனர்.