காட்டூர் மாகாளியம்மன் கோயிலில் அக்னி கம்பம் பெண்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 08:04
சூலூர்: முத்துக்கவுண்டன் புதூர், சூலூர் காட்டூர் மாகாளியம்மன் கோவில்களில் அக்னி கம்பம் நடப்பட்டது. பெண்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
முத்துக்கவுண்டன் புதூர் மாகாளியம்மன் கோவிலில், கடந்த, 19 ம்தேதி பண்டிகை சாட்டப்பட்டது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் சிவன் சக்தி கரகங்கள் எடுத்துவரப்பட்டு, அக்னி கம்பம் நடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர். வரும் மே, 4 ம்தேதி பொங்கல் விழா நடக்கிறது. சூலூர் கலங்கல் ரோட்டில் உள்ள காட்டூர் மாகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 19 ம்தேதி பண்டிகை சாட்டுதலுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு அக்னி கம்பம் நடப்பட்டது. பெண்கள் பக்தி பரவசத்துடன் கம்பத்துக்கு உப்பிட்டு, தண்ணீர் ஊற்றி வழிபட்டனர். வரும் மே 1 ம்தேதி திருவிளக்கு பூஜையும், 4 ம்தேதி அம்மை அழைத்தல், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.