ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2022 06:04
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக காலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதோடு தங்களின் நேர்த்திக் கடன்களை பணமாக, வெள்ளி மற்றும் தங்கமாக கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் .இந்நிலையில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை எண்ணும் பணியை கோயில் ஊழியர்கள் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு முன்னிலையில் கணக்கிடப்பட்டது. இதில் பணமாக :1,59,79,581, தங்கம் ; 160.கிராம், வெள்ளி : 775.860 கிலோ மற்றும் 60 வெளிநாட்டு டாலர்கள் உண்டியல்களில் இருந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார் . இந்த உண்டியல் காணிக்கை கடந்த 23. 3. 2022 முதல் 27.4.2022 வரை (35 நாட்கள்) என்பது குறிப்பிடத்தக்கது.