தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையில், சித்திரை அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் புனித நீராடினர். முன்னதாக அமாவாசை தினத்தை முன்னிட்டு, நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வருகை தந்த பக்தர்கள் நவக்கிரகங்களை சுற்றி வந்து நவகிரக தரிசனம் செய்து முன்னோர்களை வழிபாடு செய்தனர்.