திருப்பந்தியூர்: திருப்பந்தியூர் கிராமத்தில் வேம்புலி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சியில் அமைந்துள்ளது வேம்புலி அம்மன் கோவில். இந்த கோவிலில், சித்திரை திருவிழா நேற்று நடந்தது.திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு குளக்கரையில் இருந்து, 101 பால்குடம் ஊர்வலம் கிளம்பி, கோவில் வந்தடைந்தது. பின், வேம்புலி அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலையில் அம்மனுக்கு பொங்கல் வைத்தலும் தொடர்ந்து அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது. இதில் திருப்பந்தியூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.