* கோயிலில் உள்ள மூர்த்திகள் கல், சுதை, ஐம்பொன்னால் ஆனது என்று எண்ணினால் கடவுள் தெரியமாட்டார். * ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்தங்களை படித்தால் புண்ணியம் சேரும். * உன்னால் இயன்ற உதவிகளை கோயில்களுக்கு செய். * பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே. * கோயிலின் கோபுரத்தை பார்த்தவுடனேயே கைகூப்பி வணங்கு. * புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். * பிறரை குறை கூறுபவரிடம் பழகாதே. மீறி பழகினால் அவரது குணம் உனக்கு வந்துவிடும். * ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை தினமும் சொல்லு. * கடவுளை வணங்குவதை விட அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது. * பெருமாள்தான் ‘பரம்பொருள்’ என்பதை அறிந்து பக்தி செலுத்து. * கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை, வேண்டாம் என்று சொல்லாதே. * கடவுளின் திருவடிகளை பற்றிக்கொள். உனது பாவம் கரைந்துவிடும். * கோயில் பிரகாரத்தை மெதுவாக வலம் வரவும். * பிறர் கஷ்டத்தைப் போக்கும் செயல்களில் ஈடுபடு.