துவாக்குடிக்கு அருகே திருநெடுங்குளத்தில் உள்ளது நெடுங்களநாதர் திருக்கோயில். கோயில் கருவறையில் ஈசன், அன்னை பார்வதிக்காக தனது இடப்பாகத்தை தந்து அர்த்தநாரீஸ்வராக, சற்றுத் தள்ளி வீற்றிருந்து காட்சி தருகிறார். அன்னை பார்வதியோ, கருவறையில் அரூபமாக அருள்பாலிக்கிறாள். இதனால் கருவறையின் மேல் இரண்டு கோபுரங்கள் உள்ளன. மூலஸ்தானத்தில் சிவலிங்கம் மட்டுமே காட்சிதந்தாலும் இறைவன் இங்கு அம்மையப்பனாகவே அருள்புகிறான் என்பது ஐதீகம். தேவாரத் திருப்பதிகத்தில் உள்ள பத்து பாடல்களும், இடர் களையாய் நெடுங்களம் மேயவனே என்றே முடிவதால், இப்பாடல்களை காலை, மாலையில் பாராயணம் செய்வதால் துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.