* குடும்பத்தினரிடம் பாசமாக இருக்கிறாயா... உனது வீட்டில் கடவுள் வாழ்கிறார். * உன் குறையை கடவுளிடம் கூறுவது போல் நிறைகளையும் சொல்லு. * கடவுள் இசை வடிவானவர். அவரது அருளை இசையால்கூட பெறமுடியும். * உன்னிடம் என்ன உள்ளதோ அதை வைத்து பிறருக்கு உதவி செய். * உண்மை பாதையில் சென்றால் கடவுளை காணலாம். * மனதை அலைபாய விடாதே. அதை ஒரு இடத்தில் நிறுத்து. * நல்லதை செய்ய தயங்காதே. தைரியமாக அதில் ஈடுபடு. * வருமானத்திற்குள் குடும்பம் நடத்த வாழ்க்கைத்துணைக்கு சொல்லிக்கொடு. * அமைதியான மனம் இருந்தால்தான் சேவையில் ஈடுபட முடியும். * ஒருவருக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் மனம் திருப்தி அடையாது. * உன் வீட்டை முதலில் கவனி. பிறகு நீ சமூகத்திற்கு தொண்டாற்றலாம். * நல்ல எண்ணத்துடன் செய்யும் செயலுக்கு போட்டி, பொறாமை இருக்காது. * தினந்தோறும் ஒரு செயலில் தொடர்ந்து ஈடுபடு. உன் மனம் சுத்தமாகும். * எதற்கும் பதட்டப்படாதே. நடப்பது நடந்தே தீரும். * முன்னோர்கள் நடந்த பாதையில் நடந்து செல். * சர்க்கரையை வைத்து பல பண்டங்களை செய்யலாம். அதுபோல் கடவுளும் பல வடிவில் இருக்கிறார்.