சூலூர்: சூலூர் கலங்கல் ரோடு காட்டூர் மாகாளியம்மன் கோவிலில், திரு விளக்கு பூஜை நடந்தது.
சூலூர் கலங்கல் ரோடு காட்டூர் மாகாளியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, ஏப்., 26 சாட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கியது. தொடர்ந்து அக்னி கம்பம் நடப்பட்டது. அம்மனுக்கு தினமும் அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று முன் தினம் திரு விளக்கு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பெண்கள் பங்கேற்று, பக்தி பரவசத்துடன், பூக்கள் மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து, மாகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை காலை, 10:00 மணிக்கு, தீர்த்தக்குடம், பால் குடங்களுடன் அம்மை அழைத்தல் நடக்கிறது. மாலை திருக்கல்யாண உற்சவம் நடக்க உள்ளது.