தேக்கடி தேவி கோயில் சித்திரை திருவிழா : தமிழக- கேரள பக்தர்கள் இணைந்து கொண்டாடினர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2022 01:05
கூடலுார்: தேக்கடி தேவி கோயில் சித்திரை திருவிழா தமிழக- கேரள பக்தர்கள் இணைந்து கொண்டாடினர்.
தேக்கடியில் தமிழக நீர்வளத் துறை அலுவலகத்திற்கு அருகில் தேவி கோயில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா தமிழக -கேரள பக்தர்கள் இணைந்து கொண்டாடுவார்கள். ஏப். 24ல் துவங்கிய விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவு நாளான நேற்று பக்தர்கள் குமுளி மலைப்பாதையில் உள்ள காளியம்மன் கோயிலில் இருந்து தேவி கோயில் வரை மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர். சமபந்தி போஜனம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.