பதிவு செய்த நாள்
04
மே
2022
05:05
பொங்கலூர்: பொங்கலூர் மாரியம்மன் கோவில் திருக்கல்யாண உற்சவ பொங்கல் விழா கடந்த ஏப்., 19-ல் துவங்கியது. தொடர்ந்து புண்ணிய வாசனை, பூ பொரி சாட்டுதல், பொட்டு சாமி பொங்கல், மாவிளக்கு பூஜை, சுவாமி அழைத்தல், சக்தி கும்பம்,கம்பம் ஆலயம் வருதல், பூ மிதித்தல் ஆகியன நடந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை காலை மாதேசிலிங்கம் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர் பொங்கல், சிறப்பு குத்து விளக்கு பூஜை, மாவிளக்கு ஆகியன நடந்தது. இன்று காலை காலை பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். தொடர்ந்து பட்டத்தரசி அம்மன் ஆலயம் வருதல், குதிரை ஆலயம் வருதல், ஆகியன நடக்கிறது. மாலை,3:00 மணி அளவில் மீனாட்சிவலசு செங்குந்த முதலியார்கள் சார்பில், அலகு குத்தி தேரை ஊர்வலமாக கோவிலுக்கு இழுத்து வருவர். தொடர்ந்து தீர்த்தம் பெரிய பூஜை, அபிஷேகம், ஆராதனை, கிடா வெட்டுதல், கம்பம் கங்கை சேர்த்தல் ஆகியன நடக்கிறது. நாளை காலை, 10:30 மணியளவில் மஞ்சள் நீர் பூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.