கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06மே 2022 02:05
தஞ்சாவூர், கும்பகோணத்தில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவதாக போற்றக்கூடிய சாரங்கபாணி திருக்கோவிலில் சித்திரை கொடியேற்றத்துடன் துவங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்,108 திவ்ய தேசங்களில் மூன்றாவதாக போற்றக்கூடியது சாரங்கபாணி திருக்கோவில். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற இக்கோவகலில் மூர்த்தி தலம் தீர்த்தம் மற்றும் திருத்தேர் திருவாபுராணம் ஆகிய அனைத்துமே பாடல் பெற்று விளங்குவது சிறப்புடையது. இத்திருத்தலத்தில் இருகரத்துடன் எழந்தருளியுள்ள மூலவர் ஸ்ரீ ஆராவமுதனை ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் என்றும் நான்கு திருக்கரங்களுடன் சேவை சாதிக்கும் உற்சவரை நாற்றோளெந்தாய் என்றும் நம்மாழ்வார் மங்களாசாசனம் செய்தமையால் இத்திருத்தலம் உபயப்ரதான திவ்யதேசம் என்று அழைக்கப்படுகிறது.
இத்திருத்தலத்தில் சித்திரைப் பெருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த கொடியேற்றத்தில் சாரங்கபாணி ஸ்ரீதேவி பூமிதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தினமும் காலை மாலையில் சாரங்கராஜா ஸ்ரீதேவி பூமிதேவி முதல் நாள் தங்க இந்திர விமானத்திலும், இரண்டாம் நாள் வெள்ளி சூரிய பிரபையில், மூன்றாம் நாள் வெள்ளி சேஷ வாகனம், நான்காம் நாள் ஓலைச் சப்பரத்தில் எழுந்தருளி தங்ககருட வாகனம், ஐந்தாம் நாள் வெள்ளி அனுமந்த வாகனம், ஆறாம் நாள் வெள்ளி யானை வாகனம், ஏழாம் நாள் பின்னை மர வாகனம், எட்டாம் நாள் தங்க குதிரை வாகனம் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான ஒன்பதாம் நாள் திருத்தேரோட்டம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பத்தாம் நாள் ஸப்தாவர்ணம் 81 கலச ஸ்தாபனம் திருமஞ்சனம் நடைபெறும் நிகழ்ச்சியில் ஏற்பாடுகளை செயல் அலுவலர்கள் உதவி ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.