பதிவு செய்த நாள்
06
மே
2022
02:05
திருப்பூர்: கத்திரி வெயில் துவங்கியுள்ளதால், சிவாலயங்களில் தாராபிஷேகம் துவங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் கத்திரி வெயில் துவங்கும் போது, வெப்ப நிலை அதிகரிக்கிறது. சிவாலயங்களில் , ஆவுடையாரை குளிர்விக்கும் வகையில், லிங்கத்தின் மீது தாரா பாத்திரம் பொருத்தப்படுகிறது. செம்பில் செய்த தாராபாத்திரத்தினுள், வெட்டிவேர் மற்றும் மூலிகை பொடிகள் கலந்து, தண்ணீர் ஊற்றி வைக்கப்படும். லிங்கத்தின் மீது, சொட்டு சொட்டாக தீர்த்தம் விழும் வகையில், தாராபாத்திரம் அமைக்கப்படும். இதன் மூலமாக, கோடை வெப்பத்திலிருந்து சிவலிங்கம் குளிர்விக்க ப்படுகிறது. திருப்பூர் பகுதியில் உள்ள, அனைத்து சிவாலயங்களிலும், தாராபாத்திரம் பொருத்தி, தாராபிஷேகம் துவங்கியது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஊத்துக்குளி ரோடு காசிவிஸ்வநாதர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரசுவாமி கோவில் உட்பட , அனைத்து சிவாலயங்களிலும், தாராபிஷேகம் துவங்கியுள்ளது.