ஆர்.கே.பேட்டை : திரவுபதியம்மன் கோவில், தீமிதி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கோவில் வளாகத்தில் மஹாபாரதம் சொற்பொழிவு நடந்தது. ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று துவங்கிய திருவிழா, 17 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். திருவிழாவின் முதல் நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி, தங்களின் விரதத்தை துவக்கினர்.மதியம் 2:00 மணியளவில், மஹாபாரத சொற்பொழிவு நடந்தது. அதை தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு, திரவுபதியம்மன், தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார்.