காஞ்சிபுரம் : வரதராஜப்பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தேர் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 19 ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம் வரும், 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இவ்விழாவில் 19 ம் தேதி தேர் திருவிழா நடைபெறுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக திருவிழா நடைபெற வில்லை. இந்த ஆண்டு விழா நடப்பதால் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. காந்தி சாலையில் நிலை கொண்டுள்ள தேர் சக்கரம், ைஹட்ராலிக் பிரேக் நல்ல நிலையில் இருக்கிறதா, தேரில் வேறு ஏதாவது பழுதடைந்துள்ளதா என திருச்சி பெல் நிறுவன ஊழியர்கள் ஆய்வு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.