காளஹஸ்தி சிவன் கோயிலில் ஆதிசங்கராச்சாரியாரின் பிறந்த நாள் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2022 09:05
ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று ஆதிசங்கராச்சாரியாரின் பிறந்த நாளை யொட்டி கோயில் வளாகத்தில் உள்ள பிரம்ம கோயில் சன்னதி அருகில் அவரது உருவப்படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக சீனிவாசுலு கலந்து கொண்டு பேசுகையில் ஆதிசங்கராச்சாரியார் மூன்று முறை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஆன்மீக (சுற்றுலா )நடைபயணம் மேற்கொண்டு தர்ம பிரச்சாரத்தை மேற்கொண்டார். ஆன்மீகத்தை மேம்படுத்தும் நோக்கில் நாட்டின் நான்கு திசைகளில் பீடங்களை ஏற்பாடு செய்த ஆன்மீகவாதி என்றார்.ஆதிசங்கராச்சாரியர் சாக்ஷாத் பரமசிவனின் அம்சம் என்றும் தெரிவித்தார் . ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் பிறந்த நாள் உற்சவத்தில் கோயில் சிவன் கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.