பண்ணாரி மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2022 09:05
திருப்பூர்: திருப்பூர், மாஸ்கோ நகர், சரளைக்காடு, ஸ்ரீ வெள்ளை விநாயகர், ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 1ம் தேதி பொட்டுச்சாமிக்கு பொங்கல் வைத்தலுடன் துவங்கியது. மறுநாள் சுவாமிக்கு அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. நேற்று முன்தினம் பெண்கள் பால்குடம் ஊர்வலம் எடுத்து வந்தனர்.நேற்று காலை, மாவிளக்கு ஊர்வலமும், மதியம் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. நுாற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் வீடுகள் முன் பொங்கல் வைத்தனர்.மதியம் உச்சிபூஜை முடிந்து, பக்தர்கள் நேர்த்திக்கடனாக விடப்பட்டிருந்த ஆடு வெட்டப்பட்டு, கோழி அறுக்கப்பட்டது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று மஞ்சள்நீர் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடக்கிறது. நாளை விளையாட்டுபோட்டி, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.