நாம் எது செய்தாலும் பிறர் குறைகூறிக்கொண்டே இருப்பர். இவர்களின் சொற்களை மதிப்பவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்த சிந்தனை. நம் மனதை நோகடிப்பது குறைகூறுபவர்களின் நோக்கம். இவர்களை கண்டு கொள்ளாமல் இருங்கள். அந்த மவுனமே ஆயுதமாய் அவர்களை துளைக்கும். இந்த உலகில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு விமர்சனத்திற்கு உட்பட்டவராகத்தான் இருப்பர். எல்லோரையும் மகிழ்ச்சிப்படுத்த முடியாது. எனவே பிறர் கூறுவதை காதில் வாங்காமல், இலக்கை நோக்கி முன்னேறுங்கள். அப்போதுதான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். நாம் பிறரை கெடுக்காமல் இருக்கும் வரை நம்மை யாராலும் கெடுக்க முடியாது.