அன்னத்தால் பிராணனையும், பிராணனால் பலத்தையும், பலத்தால் தவத்தையும், தவத்தால் புத்தியையும், புத்தியால் மனத்தையும், மனத்தால் சாந்தியையும், சாந்தியால் சித்தத்தையும், சித்தத்தால் நினைவையும், நினைவால் ஸ்திதப் பிரக்ஞையையும், ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெற முடியும் என்கின்றன ஞானநூல்கள். ஆக, மேற்கண்ட அனைத்தையும் அன்னதானம் கொடுப்பதால், தானங்களில் மிக உயர்ந்ததாக இது போற்றப்படுகிறது. நாமும் அன்னதானம் செய்து சிறப்பு பெறுவோம்!