பதிவு செய்த நாள்
13
மே
2022
09:05
பல்லடம்: அருள்புரம் மாரியம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா நடந்தது. பல்லடம் அடுத்த, அருள்புரம் தண்ணீர் பந்தலில் ஸ்ரீ செல்வ விநாயகர், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு பூச்சாட்டு பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.
தற்போது, ஒன்பதாம் ஆண்டு பூச்சாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மே 5ம் தேதி, பொட்டு சாமிக்கு பொங்கல், பொரிச்சாட்டு விழா, வாஸ்து பூஜை உள்ளிட்ட அவற்றுடன் பொங்கல் விழா துவங்கியது. தொடர்ந்து, கணபதி ஹோமம், கம்பம் வெட்டுதல், படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல் கம்பம் நடுதல் ஆகியவையும் நடந்தன. நேற்று முன்தினம் அம்மனுக்கு பூச்சொரிதல், மாவிளக்கு, முளைப்பாரி, மற்றும் பூவோடு எடுத்தல் நிகழ்வுகள் நடந்தன. பெண்கள் பலர் பக்தி பரவசத்துடன் பூவோடு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று, கம்பம் எடுத்து கங்கையில் விடும் விழா, அம்மன் திருவீதி உலா உள்ளிட்டவை நடந்தன. அபிஷேக அலங்கார பூஜைகளை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.