பதிவு செய்த நாள்
13
மே
2022
12:05
திண்டிவனம், திண்டிவனம் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி அம்மன் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிேஷகம் நடந்தது.அதனையொட்டி, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில் கோவில் டிரஸ்ட் தலைவர் ரங்கமன்னார், செயலாளர் வெங்கடேசன், வாசவி கிளப் இண்டர்நேஷனல் பொருளாளர் சிவக்குமார், வாசவி கிளப் இயக்குனர்கள் சங்கர், மனவளக் கலை பிரபாகரன், வாசவி பிரபாகரன், நாகராஜன், விசுவநாதன், வெங்கட்ரமணன், சீனுவாசன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஷியாம், வினோத், சூரஜ், லோகநாதன் செய்திருந்தனர்.