சங்கராபுரம், சங்கராபுரத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெயந்தியையொட்டி சுவாமி வீதியுலா நடந்தது.அதனையொட்டி, வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்குநேற்று முன்தினம் காலை சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதியுலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை ஆர்யவைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.