சிவபுரிபட்டியில் பிரதோஷ வழிபாடு : நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13மே 2022 05:05
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட தர்மசம்வர்த்தினி உடனுறை சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இன்று மாலை 4:30 மணிக்கு 5 அடி உயர நந்தீஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், திருநீறு, பால் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும் சிறப்பு வழிபாடும் செய்யப்பட்டது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில், சதுர்வேதமங்கலம் ருத்ர கோடீஸ்வரர் கோயில், முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில், உலகம்பட்டி உலகநாயகி சமேத உலகநாதர் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.