முற்பிறவிகளில் பித்ருக்களைப் பூஜை செய்யாமல் இருந்திருப்பது, தெய்வத்தையும் திருக்கோயில்களையும் நிந்திப்பது, ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை கோள் சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்டளைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களினால்தான் இத்தகைய துன்பங்கள் மறுபிறவிகளில் ஏற்படுவதாக பாரதத் திருநாட்டை ஆண்ட போஜன் என்ற மன்னன், தனது நீதிநூலில் கூறியுள்ளார்.
தினமும் காலையில் நீராடியபின்பு, கீழ்கண்ட ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி என்ற ஸ்லோகத்தை 48 தடவை சொல்லி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து பூஜித்து வரவும். இந்த அதி அற்புத, மகத்தான சக்திவாய்ந்த ஸ்லோகம் உலகப் பிரசக்தி பெற்ற ஸ்ரீமத் அகோபில மடத்தின் 44 வது பட்டம் அழகிய சிங்கரும் திருவரங்கத்தின் கோபுரத்தை நிர்மாணித்தவருமான ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிய சக்தி மிகுந்த ஸ்லோகமாகும் இது, உங்கள் துன்பத்தையும் துயரத்தையும் போக்குவதற்கு இதைவிட சிறந்த பரிகாரம் கிடையாது.
இந்த ஸ்லோக்ததை சொல்லி ஸ்ரீ லட்சுமி நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.