மாசி மாத பிறப்பு, ஏகாதசி; பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13பிப் 2026 11:02
கோவை; மாசி மாத பிறப்பு மற்றும் ஏகாதசி தினத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவம் மூர்த்திக்கு அபிஷேகம் பூஜை நடந்தது இதில் துளசி மாலை அலங்காரத்துடன் மூலவர் வெங்கடேச பெருமான் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் விரைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
தமிழ் மாசி மாத பிறப்பு மற்றும் முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு கரி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மகாலட்சுமி தாயாருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் மகாலட்சுமி தாயார் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.