காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2022 08:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் விழாவில் மூன்றாம் நாள் கருட சேவை கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் மட்டும் ஏன் கருட சேவை பிரபலமாக நடக்கிறது தெரியுமா?
சோளிங்கரில் வாழ்ந்த தொட்டாச்சாரியார் என்ற பக்தர், இந்த கருட சேவையை தரிசிப்பதை வழக்கமாக கொண்டு இருந்தார். ஒரு சமயம் அவரால் இங்கு வரமுடியவில்லை. மனம் வருந்தி சோளிங்கரில் உள்ள தீர்த்தகரையில் நின்று ஸ்வாமியை மனமுருகி வழிபட்டார். அப்போது ஒரு விநாடி மட்டும் ஸ்வாமி அவருக்கு கருட வாகன காட்சி கொடுத்தார். இதன் அடிப்படையில் கோபுர தரிசனம் போது ஸ்வாமியை ஒரு விநாடி குடையை வைத்து மறைத்து விடுவார். இந்த கருட வாகன காட்சி தான் பாரத போரில் உள்ள கர்ணனுக்கு காண்பித்து மோக்ஷம் கொடுத்தார். இந்த திருக்கோலத்தில் பார்த்தால் நிச்சயம் நமக்கும் மோக்ஷம் கிடைக்கும் என்று நம்பிக்கை. இந்த திருக்கோலத்தில் தான் முடவனுக்கு காட்சி கொடுத்தார் பெருமாள். தேசிகர் பெருமான் மரியாதை வாங்கி கொண்டு இருக்கும் போது ஒரு அழு குரல். இரண்டு கால் இல்லாத முடவன் ஒருவர் தீவிர வரதர் பக்தர். வரதரிடம் வேண்டுகிறார், என்னை இரண்டு கால் இல்லாத முடவனாக படைத்தவனும் நீயே, ஊரில் உள்ள அனைவரும் உன் கருட வாகன காட்சியை பார்க்க வருகின்றனர் ஆனால் என்னால் முடியவில்லையே என வருந்தி அழுதார். இந்த அழு குரலை கேட்ட பெருமாள் தேசிகர் சன்னதியில் இருந்து வேகமாக புறப்பட்டு முடவனுக்கு காட்சி அளித்து, வரம் அளிக்கிறார் வரதர். அதனால் தான் வருடத்தில் ஒரு நாள் மட்டுமே முடங்குவீதிக்கு வந்து காட்சியளிக்கிறார் பெருமாள். எங்கும் இல்லாத கருட சேவை இங்கு அவ்வளவு பிரசித்தி பெற்றது. வைகாசி பிரம்மோற்சவம் விழாவில் மூன்றாம் நாள் கருட சேவை சேவையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.