அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில், தெப்பத்தேர் உற்சவம் நேற்றிரவு நடந்தது.
அவிநாசியிலுள்ள ஸ்ரீகருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா நடந்து வருகிறது. தேரோட்டம் முடிந்த நிலையில், நேற்று 12வது நாள் உற்சவமாக, தெப்போற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர் மற்றும் ஆனந்தவல்லி அம்மன் திருவீதியுலா வந்து பக்தர்கள் அருள்பாலித்தனர்.அதன்பின், தேவர் சமூக அறக்கட்டளை சார்பில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, ஐந்து முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் ஈடுபட்டனர்.