உடுமலை: உடுமலை அமராவதி அம்மன் திருக்கல்யாண திருவிழாவில் இன்று சக்தி அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.உடுமலை அருகே அமராவதி அணையில், பிரசித்தி பெற்ற அமராவதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் திருக்கல்யாண உற்சவ திருவிழா மற்றும் மலைமேல் உள்ள ஸ்ரீ மலைப்பிடாரி அம்மனுக்கு அபிேஷக ஆராதனை விழா கடந்த 3ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.
விழாவில், இன்று இரவு, 7:00 மணிக்கு சக்தி அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை (18 ம் தேதி) காலை, 5:00 மணிக்கும், தொடர்ந்து அபிேஷக, விேசஷ பூஜைகளும் நடைபெறுகிறது. அன்று மதியம் அன்னதானம் நடைபெறுகிறது. அன்று மாலை 6:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நடக்கிறது.வரும் 19ம் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் திருச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. வரும் 20ல் மறுபூஜையும் நடைபெறும். இவ்விழாவில், அமராவதி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.