பதிவு செய்த நாள்
31
ஜூலை
2012
11:07
ரெட்டியார்சத்திரம்: கோபிநாதசுவாமி கோயிலுக்கான சிறப்பு பஸ்சில், வசூலிக்கப்படும் கூடுதல் கட்டண விகிதத்தை குறைக்க பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ரெட்டியார்சத்திரம்-கன்னிவாடி ரோட்டில், பங்காருபுரம் அருகே மலைக்குன்றில் கோபிநாதசுவாமி கோயில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி, சனிவார விழாக்கள் விசேஷமாக நடக்கும். தற்போது, விசேஷ நாட்கள் மட்டுமின்றி, பிற நாட்களிலும்,பக்தர்கள் வருகின்றனர். இருப்பினும், திண்டுக்கல், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து, சனிக்கிழமைகளில் மட்டுமே சிறப்பு பஸ் வசதி உள்ளது. இந்நிலையில், சிறப்பு பஸ்களில் இரு மடங்கு அளவிற்கு, கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கின்றனர். திண்டுக்கல்லில் இருந்து இயக்கப்படும் பஸ்களில், 15 ரூபாய் கட்டணம் நிர்ணயித்துள்ளனர். கன்னிவாடி, ரெட்டியார்சத்திரத்தில் இருந்து, தனியார் ஷேர் ஆட்டோ, வேன்களிலும் "பார்க்கிங் கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கும் நிலை உள்ளது.அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "பிற இடங்களுக்கு செல்லும் பஸ்களை "டிரிப்-கட் செய்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வசூல் பாதிப்பை தவிர்க்க கூடுதலாக கட்டணம் வசூலிக்க கோர்ட் அனுமதித்துள்ளது, என்றார். பக்தர்கள் வருகை உள்ள கோபிநாதசுவாமி கோயிலுக்கு, நிரந்தர பஸ் வசதியை ஏற்படுத்த வேணடும்.