பதிவு செய்த நாள்
21
மே
2022
05:05
திருத்தணி, திரவுபதியம்மன் கோவிலில், பாரத கொடியேற்றத்துடன் தீ மிதி விழா, நேற்று துவங்கியது.விழாவையொட்டி, காலையில் மூலவர் அம்மனுக்கு சந்தான காப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம், பாரத சொற்பொழிவு நடந்தது. வரும் 27ம் தேதி காலையில் சுபத்திரை திருமணம், 30ம் தேதி அர்ஜூனன் தபசு, அடுத்த மாதம், 5ம் தேதி காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி விழாவும் நடக்கிறது.தொடர்ந்து, 6ம் தேதி நண்பகலில், தர்மர் பட்டாபிஷேகத்துடன் இந்தாண்டிற்கான தீமிதி விழா நிறைவடைகிறது.தவிர, நேற்று முதல் தீமிதி விழா முடியும் வரை, தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சந்தன காப்பு நடைபெறும். மதியம் மகா பாரத சொற்பொழிவு, இரவு நாடகமும் நடக்கிறது.