அண்ணாநகர் : அகத்தீஸ்வரர் கோவிலில் ஆடி செவ்வாய் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டனர். வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவிலில் ஆடிசெவ்வாய் வழிபாடு நேற்று நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு கோவில் திறக்கப் படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பே, பெண்கள் நீண்ட வரிசையில் நின்று அகத்தீஸ்வரரை வழிபட காத்திருந்தனர். இரவு 10.30 மணி வரை, பேருந்து நிலையம் அருகே வடக்கு மாடவீதியில் துவங்கி, மேற்கு மாடவீதி, தெற்கு மாடவீதி வழியாக கோவில் கருவறை அருகே வரை நீண்ட வரிசையில், ஆயிரக்கணக்கான பெண்கள் நின்று, அருணாசலேஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்த அகத்தீஸ்வரரையும், அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் காட்சியளித்த சொர்ணாம்பிகையையும் வழிபட்டனர்.