பதிவு செய்த நாள்
01
ஆக
2012
11:08
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில், நேற்று கம்பம் நடும் விழா நடந்தது.
சேலம், கோட்டை பெரியமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா ஜூலை 27ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று கம்பம் நடும் விழா நடந்தது.
இதில், சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சியில், பக்தர்களால் சுமந்து வரப்பட்ட கம்பம், கோவில் முன் நடப்பட்டது. இதையடுத்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.
வரும் 8ம் தேதி ஆடித்திருவிழாவின் முக்கிய அம்சமான பொங்கல் வைபவமும், உருளுதண்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10ம் தேதி திருத்தேர் உலாவும், 12ம் தேதி சத்தாபரணம், 13ம் தேதி வசந்த உற்சவம், 14ம் தேதி பால்குடவிழா ஆகிய நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.