* கோபத்தை கட்டுப்படுத்துபவனே உண்மையான வீரன். * ஆசைகளை குறைத்தால் அமைதி கூடும். * அநியாயத்தை கண்டால் தடுத்து நிறுத்துங்கள். * துன்பத்திலும் பொறுமையாக இருங்கள். அதுதான் நல்லது. * கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகியவை உங்களின் நற்பண்பை கெடுத்துவிடும். * அதிக சொத்துக்களை சேர்க்காதீர்கள். * கருணை உள்ளவர் இருக்குமிடம் சொர்க்கம். * கர்வம், அகந்தை கொண்டவர்களுக்கு சொர்க்கத்தில் இடமில்லை. * உங்களுக்கு கொடுக்கப்பட்ட செல்வத்தை சரியாக பயன்படுத்துங்கள். * ஒருவர் தர்மம் செய்கிறார் என்றால் அதற்கு இறைவனின் கருணையே காரணம். * தர்மம் செய்தால் செல்வம் ஒருபோதும் அழியாது. * தர்மம் செய்பவர்களுக்கு பாவ மன்னிப்பு கிடைக்கும். * கஞ்சத்தனமாக இருந்தால் இறைவனின் நம்பிக்கையை இழப்பீர்கள். – பொன்மொழிகள்