மாசிக்களரி ; கோட்டை முனீஸ்வரர் கோயிலில் விளக்குபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2026 10:02
கமுதி; கமுதி அருகே கோட்டைமேடு கிராமத்தில் தனி ஆயுதப்படை வளாகத்தில் அமைந்துள்ள கோட்டை முனீஸ்வரர் கோயில் 49வது மாசிக்களரி நடந்தது.தினந்தோறும் கோட்டை முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.பக்தர்கள் முக்கிய வீதிகளில் பால்குடம்,வேல்குத்தி சக்தி கரகத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.கோயில் முன்பு மக்கள் பொங்கல் வைத்தனர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் முடிந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. நிறைவு நாளாக 508 விளக்குபூஜை நடந்தது.கோட்டை முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.கமுதி, கோட்டைமேடு,பசும்பொன் அதை சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலரும் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கமுதி தனி ஆயுதப்படை போலீசார் செய்தனர்.