காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ விழா; திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2026 11:02
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10 - ஆம் தேதி முதல் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை சோமாஸ்கந்த மூர்த்தி பார்வதி தேவி ( சாமி அம்மையார்களின் திருக்கல்யாண உற்சவம் அதிகாலை 3:0 மணி முதல் நடைபெற்றதை தொடர்ந்து காலை 11:30 மணிக்கு புதுமண தம்பதிகளாக ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரும் ஞானப் பிரசுனாம்பிகை தாயாரும் இரண்டு வெவ்வேறு ருத்ராட்சத்தைகளால் அலங்கரிக்கப்பட்ட ருத்ராட்ச அம்பாரி வாகனங்களில் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து கோயில் வரை நகரி வீதி - பஜார் வீதி வழியாக கோயிலை அடைந்தனர்.
இரவு 9 மணி முதல் கோயிலில் ஆஸ்தான மண்டபத்தில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜ சுவாமி க்கு திருக் கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பஞ்சபூத லிங்கங்களில் ஆகாச லிங்கமாக சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜ சுவாமிக்கு ஆண்டு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. வாயு லிங்க ஷேத்திரமாக அருள்பாலிக்கும் ஞானப் பிரசுனாம்பிகை சமேத ஶ்ரீ காளஹஸ்திஸ்வரரின் திருக் கல்யாண உற்சவத்தை தொடர்ந்து நடராஜ சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது இங்கு வழக்கம். முன்னதாக கோயில் அலங்கார மண்டபத்தில் இருந்து சிவகாமி சுந்தரி சமேத நடராஜ சுவாமியை கோயில் ஆஸ்தான மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகளை தொடர்ந்து சிறப்பு அபிஷேகங்களை கோயில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆகம முறைப்படி சிவகாமி சுந்தரி சமேத நடராஜ சுவாமியின் திருக் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து சிவகாமி சுந்தரி சமேத நடராஜ சுவாமி நான்கு மாட வீதிகளில் ஊர்வலம் நடைபெற்றது. இதில் கோயில் செயல் அலுவலர் பாபி ரெட்டி தம்பதியினர் மற்றும் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் கொட்டே சாய் பிரசாத் தம்பதியினர் மற்றும் தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கோலா ஆனந்த் தம்பதியினர், கோயில் அதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.