குடும்பத்தில் கஷ்டம் வந்துவிட்டது. கையில் இருந்த பணமெல்லாம் ஏதோ ஒரு வழியில் போய்விட்டது. இந்த சூழ்நிலையில் சிலர் விரக்தியாகவும் உணர்ச்சி வசப்பட்டும், ""பிச்சை எடுத்தாவது என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன், என்று சபதம் செய்வார்கள்.பிச்சை எடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை. குடும்பத்தை காப்பாற்ற ஏதாவது ஒரு வேலை செய்து சம்பாதியுங்கள் என்கிறது இஸ்லாம். நல்வழியில் சேரும் பணம் குறைவாக இருந்தாலும், இருப்பதற்குள் வாழ்க்கையை நடத்துங்கள். ஏதோ ஒரு காரணத்தால் செல்வம் அனைத்தையும் இழந்தாலும் கூட, அடுத்து என்ன செய்வது என உடனடியாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். கூலி வேலை செய்தேனும் குடும்பத்தை காப்பாற்றியாக வேண்டும். ஆனால் எந்த சூழ்நிலையிலும், பிச்சை எடுத்து மட்டும் பணம் ஈட்டக்கூடாது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மக்களிடம், ""குடும்பத்தினரைக் காப்பாற்ற பிச்சை எடுக்காமல் உழைத்து பொருள் சம்பாதிப்பவர் ஒளிப்பிரகாசம் நிறைந்த முகத்துடன் மறுமையில் அல்லாஹ்வை சந்திப்பார், என்கிறார்கள்.இனி "பிச்சை எடுத்தாவது குடும்பத்தைக் காப்பாற்றுவேன் என்ற சொற்களையே மறந்து விடுங்கள். அதற்கு பதிலாக, ""எப்பாடுபட்டேனும் உழைத்து என் குடும்பத்தைக் காப்பாற்றுவேன், என சொல்லுங்கள். உழைப்புதான் உயர்வு என்பதே இன்றைய ரமலான் சிந்தனை.
இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.29