"யாத்திரை என்றாலே தூய சிந்தனைகளுடன் இறைவனைப் பற்றிய விஷயங்களைப் பேசிக் கொண்டும், பாடிக் கொண்டும் கோயில்களைத் தரிசிக்க வேண்டும். போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் எந்தக் கோயிலுக்குச் செல்வதானாலும் நடந்து தான் சென்றனர். இதனால் மனம், உடல் புனித தன்மை பெற்றதை அவர்கள் உணர்ந்தனர். யாத்திரை சமயத்தில், பலதரப்பட்ட மனிதர்களுடன் பேசவும், பழகவும் வாய்ப்பு கிடைப்பதால் பரந்த மனப்பான்மையும் உண்டாகிறது. பக்தியின் நோக்கமே பரந்த மனம் பெறுவது தான்.