பதிவு செய்த நாள்
02
ஆக
2012
11:08
பழநி : ""பழநி மலைக்கோவிலின், 2011, ஜூலை முதல், 2012, ஜூலை வரையிலான, ஒரு ஆண்டின் மொத்த வருவாய், 114.49 கோடி ரூபாய், என, கோவில் இணை ஆணையர் பாஸ்கரன் தெரிவித்தார். அவர் கூறுகையில், ""ரோப் கார் மூலம், 3.42 கோடி ரூபாயும், வின்ச் மூலம், 3.39 கோடியும், பஞ்சாமிர்தம் மூலம், 24.11 கோடியும், உண்டியல் மூலம், 25.5 கோடி ரூபாயுமாக, இந்தாண்டு மொத்த வருமானம், 114.49 கோடி ரூபாய் கிடைத்துள்ளது, என்றார்.