முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் வடக்குவாசல் செல்லியம்மன் கோயில், 36ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடந்து வருகிறது. நேற்று காலையில் 600 பக்தர்கள் பக்தர்கள் காந்தி சிலையிலிருந்து பால்குடத்துடன் செல்லியம்மன் கோயில் வரை ஊர்வலமாக வந்தனர். பின்னர் 16 அடி அலகு குத்தி, பலர் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அக்னி சட்டி எடுத்தல், பூப்பல்லக்கில் அம்மன் நகர் வலம், பூத்தட்டு ஊர்வலம், செல்வநாயகபுரத்திலிருந்து ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தலைமையில் முளைப்பாரி ஊர்வலமாக எடுத்து வரபட்டது. பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தபட்டு, பரிசு வழங்கபட்டது. ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் அன்னதானம் நடந்தது.