பதிவு செய்த நாள்
25
மே
2022
01:05
செஞ்சி:கடம்பத்துார் ஒன்றியம், செஞ்சி தர்மராஜா கோவில், புதுப்பிக்கப்பட்டு புதிய கொடி மரம், இறை பிம்பங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. காலை 11:00 மணிக்கு, புதிய சிலைகளுக்கு அஷ்டாதச கிரியை, சயனாதிவாசமும் நடைபெறும். பின் மாலை 5:00 மணிக்கு, புதிய பிம்ப பிரதிஷ்டை, கும்ப அலங்காரமும் நடைபெறும். கும்பாபிஷேக நாளான 3ம் தேதி, காலை 8:30 மணிக்கு, கலச புறப்பாடும், காலை 9:30 மணிக்கு விமான கோபுர அபிஷேகமும், தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவாக கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடைபெற உள்ளது.