அய்யனார் கோவில் தேர் திருவிழா : பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2022 09:05
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் அய்யனார் கோவில் தேர்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து தேர் இழுத்தனர்.
திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் உள்ள வினாயகர், அய்யனார், மாரியம்மன், குள்ளகருப்பு, முனியப்பா சுவாமிகளுக்கு கடந்த வாரம் திருவிழா காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி சுவாமி திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து அய்யனாருக்கு ஊரணி பொங்கல், மாரியம்மனுக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது.தொடர்ந்து ஒன்பதாம் நாள் திருவிழாவையொட்டி 29ம் தேதி தேர் திருவிழா நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் விநாயகர், அய்யனார், மாரியம்மன் எழுந்தருளினர். மாலை 3மணிக்கு பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.