இன்று வைகாசி ரோகிணி. திருக்கோஷ்டியூர் நம்பி அவதரித்த நாள். பகவத் ராமானுஜர் நலனில் மிகுந்த பற்று கொண்டிருந்தார் நம்பி. சந்நியாசி என்பதால் பிச்சை பெற்று உண்பவர் ராமானுஜர். ஸ்ரீரங்கத்தில் ஒருமுறை சிலர் விஷம் கலந்த உணவை கொடுத்து விடுகிறார்கள். இது தெரிந்தவுடன் அவர் உண்ணா விரதம் இருந்தார். இதை அறிந்த நம்பி திருக்கோஷ்டியூரிலிருந்து வந்தார். கடுமையான வெயிலில், காவிரி நதிக்கரையில் நம்பியைப் பார்த்தவுடன் சுடும் மணலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார் ராமானுஜர். அவரை நம்பி எழுமாறு கூறவில்லை. அருகே இருந்த கிடாம்பி ஆச்சான் என்பவர், உடனே ராமானுஜரை அள்ளித்தூக்கி,“ஏன் சுடும் மணலில் இவ்வளவு நேரம் கிடக்க வைக்கிறீர்?” என்று நம்பியிடம் கேட்டார். அதற்கு நம்பி, எம்பெருமானார் மீது மிகுந்த பற்று கொண்டவர் யார் என்று பார்க்கவே இவ்வாறு செய்தோம்” என்று கூறினார். அன்றுமுதல் ராமானுஜருக்கு தினமும் பிரசாதம் செய்து கொடுக்க கிடாம்பியாச்சானை, நம்பி நியமித்தார். இதிலிருந்து நம்பி எப்பொழுதும் எம்பெருமானாரின் நலனையே சிந்தித்தார் என்பதை அறியலாம்.