வைத்தீஸ்வரன் கோயிலில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30மே 2022 09:05
மயிலாடுதுறை: வைகாசி மாதம் மண்டலாபிஷேக கார்த்திகையை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, விடிய விடிய புஷ்பப் பல்லக்கில் வீதி உலா தருமபுர ஆதினம் உள்ளிட்டோர் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தியநாதசுவாமி ஆலயம் புகழ்பெற்ற முருகன் ஸ்தலமாகும். இங்கு முருகன் செல்வமுத்துக்குமாரசாமி யாக அருள்பாலிக்கிறார். நவகிரகங்களில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமான இந்த ஆலயம் விளங்குகிறது இங்கு வைகாசி மாதம் நடைபெறும் கார்த்திகை மண்டலாபிஷேக கார்த்தியை என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை முன்னிட்டு செல்வ முத்துக்குமாரசாமி கார்த்திகை மண்டபத்திற்கு வள்ளி தெய்வானை சமேதராக எழுந்தருளினார். அங்கு அவருக்கு பால் பன்னீர் இளநீர் சந்தனம் உள்ளிட்ட 18 வகையான பொருட்களைக் கொண்டு சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை செய்யப்பட்டது தருமபுர ஆதீன 27-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து செல்வமுத்துக்குமாரசாமி, வள்ளி தெய்வானையுடன் ஆலய வெளிப் பிரகார வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. நள்ளிரவில் நடைபெற்ற புஷ்ப பல்லக்கு வீதி உலா நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.