மரணத்தைக் கண்டு சிலர் பயப்படுவதே இல்லை. அது எப்போது வருமோ என சிலர் கலங்குகின்றனர். இதற்கு பயப்படுவதில் அர்த்தமில்லை என வாழ்ந்தவர் மார்ட்டின் லுாதர். பைபிள் கருத்துக்கு மாறாக இவர் செயல்படுவதாக சிலர் குற்றம் சுமத்தினர். விசாரிக்க வேண்டிய இளவரசர் மூன்றாம் பிரெட்ரிக் இவரை ஆதரித்ததால் விசாரணை நடக்கவில்லை. ஆனால் போப் வலியுறுத்தியதால் இளவரசர் இவருக்கு ஆதரவை விலக்கிக் கொண்டார். லுாதருக்கு நெருக்கமான சிலர்,‘‘இளவரசர் தங்களை கைவிட்டு விட்டார். இனி நீங்கள் யாரிடம் அடைக்கலம் தேடப் போகிறீர்கள்?’’ எனக் கேட்டனர். ‘‘எப்போதும் பரலோகத்தையே என் புகலிடமாக வைத்திருக்கிறேன்’’ என பதிலளித்தார் லுாதர். மரணத்தைக் கண்டு பயப்படாதவர்களே மாமனிதர்கள்.