1 - 6 - 2022 நடன கோபால நாயகி சுவாமிகள் கோயில் கும்பாபி ேஷகம்
மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என நினைப்பவர்கள் குருநாதர்கள், கடவுள் மீதுள்ள பக்தியை பல வழிகளில் எடுத்துச் சொல்வார்கள். அவற்றில் ஒன்று நாயக, நாயகி ( தலைவன் – தலைவி ) பக்தி மார்க்கம். அதனை மக்களிடம் சென்று பரப்பியவர் மதுரை நடன கோபால சுவாமிகள். சென்ற நுாற்றாண்டில் வாழ்ந்த இவர், முதலில் பரமக்குடி நாகலிங்க அடிகளிடம் சீடராக இருந்து பின்னாளில் ஆழ்வார் திருநகரி வடபத்ர அரையர் மூலம் வைணவத்திற்கு மாறினார். இவர் வாழ்வில் கிருஷ்ணர் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். தன்னையே மறந்து கண்களில் கண்ணீர் வர பாடல்கள் பாடி கிருஷ்ணர் மீது பக்தி செய்வார் நடன கோபால நாயகி சுவாமிகள்.இவரது பக்தியை உலகிற்கு உணர்த்த நினைத்த கிருஷ்ணர். பலநாட்கள் சுவாமிகள் மெய்மறந்து பாடும் போது கிருஷ்ணரே அவரது மடியில் அமர்ந்தவாறு கண்ணீரை துடைக்கும் காட்சியை பக்தர்கள் கண்டு நெகிழ்ச்சியுற்றுள்ளனர். நடன கோபால நாயகி சுவாமிகள் மூலம் உண்மையான பக்தனை கடவுள் தேடி வருவார் என்பதை கிருஷ்ணர் உணர்த்துகிறார்.